சுடச்சுட

    

    இன்குபேட்டர், வென்டிலேட்டர் வசதியுடன் பச்சிளங்குழந்தைகளுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை

    By திருநெல்வேலி  |   Published on : 31st December 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் பச்சிளங்குழந்தைகளுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

    இந்த ஆம்புலன்ஸில் பச்சிளங்குழந்தைகளுóககான முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியர்கள் பணியில் இருப்பர். மேலும், உயிர்காக்கும் மருந்துகள், இன்குபேட்டர், வென்டிலேட்டர், பல்ஸ் ஆக்ஸி மீட்டர், சக்ஸன் அப்பாரட்டஸ் உள்ளிட்ட நவீன உபகரணங்களும் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்தின்போதோ, பிரசவத்துக்கு பிறகோ உயர் சிகிச்சை தேவைப்படும் பச்சிளங்குழந்தைகள், பிரசவத்தில் போதிய நலனின்றி பிறக்கும் குழந்தைகள் ஆகியவற்றை உடனடியாக அங்கிருந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கோ, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ கொண்டுசெல்வதற்காக இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது.

    மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே குழந்தைக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து நவீன உபகரணங்களும் இடம் பெற்றிருப்பதாலும், பயிற்சி பெற்ற செவிலியர் உடன் இருப்பதாலும் பச்சிளங்குழந்தைகளை இக்கட்டான நிலையிலிருந்து மீட்க முடியும்.

    இந்தச் சேவையைப் பெற வழக்கம்போல 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான 108 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். இது கட்டணமில்லா சேவையாகும். குழந்தைகள் குறித்த விவரத்தைக் கேட்டு பச்சிளங்குழந்தைகள் என்றால் உடனடியாக இந்த சிறப்பு ஆம்புலன்ûஸ அனுப்பி உதவிடுவர்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்டமாக திருநெல்வேலி மாநகரப் பகுதிக்கு இந்த ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருக்கும். 24 மணிநேரமும் இதன் சேவையைப் பெறலாம். இதற்காக போதிய பணியாளர்கள் சுழற்சி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன், ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில், மருத்துவ நலப்  பணிகள் இணை இயக்குநர் ஜெயபால், துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட செயல் அலுவலர் ஷியாம் நைஜிஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai