சுடச்சுட

  

  கடையநல்லூர் பஸ் நிழற்குடையில் வாஞ்சிநாதன் படம் இடம்பெறாவிட்டால் போராட்டம்: வாஞ்சி இயக்கம் அறிவிப்பு

  By கடையநல்லூர்,  |   Published on : 31st December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடையநல்லூர் மருத்துவமனைப் பகுதியிலுள்ள பஸ் நிழற்குடையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வாஞ்சிநாதனின் உருவப்படத்தை பொங்கலுக்கு முன்னர்  இடம்பெறச் செய்யாவிடில் போராட்டங்கள் நடத்தப்படும் என, வாஞ்சி இயக்க நிறுவனர்-தலைவர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவரது அறிக்கை:

  இந்தப் பயணிகள் நிழற்குடையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிலரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செங்கோட்டையைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி வாஞ்சிநாதனின் ஓவியம் அதில் இடம்பெறவில்லை. இந்த ஓவியம் இடம்பெற வேண்டுமென தொடர்ந்து வாஞ்சி இயக்கம் கோரி வருகிறது. மேலும், இதை வலியுறுத்தி ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திர தின விழாவை வாஞ்சி இயக்கம் அங்கு நடத்தியது. இருப்பினும் வாஞ்சிநாதன் படம் அங்கு வரையப்படவில்லை.

  எனவே, வரும் பொங்கலுக்கு முன்பாக தியாகி வாஞ்சிநாதன் ஓவியம் நிழற்குடையில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai