சுடச்சுட

  

  கணவருடன் சேர்த்துவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் திடீர் உண்ணாவிரதம்

  By திருநெல்வேலி,  |   Published on : 31st December 2013 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கணவருடன் சேர்த்துவைக்கக் கோரி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் திடீர் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காந்திஜி காலனியை சேர்ந்தவர் ஆ. செல்வராணி (21). 12-ஆம் வகுப்பு முடித்துள்ள இவர், வள்ளியூர் நம்பியான்விளை வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்கத்திருமணி என்பவருடன் பழகினாராம். இதையடுத்து,  இருவரும் வெளியூர் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 2 மாதம் கழித்து ஊர் திரும்பியவர்களுக்கு, கிராம பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 21.10.2012-ல் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

  இந்தநிலையில், செல்வராணியிடம் அவரது கணவர், மாமனார், மாமியார் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினராம்.

  இதுதொடர்பாக, வள்ளியூர் மகளிர் காவல்நிலையத்தில் நான்கு முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த செல்வராணி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக பதாகையை பிடித்தபடி, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கு அருகே உண்ணாவிரதம் இருந்தவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்தித்து மனு அளிக்கச் செய்தனர். இந்த மனு மீது 4 நாளில் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை செல்வராணி திரும்பப் பெற்றார்.

  இதுதொடர்பாக போலீஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதித்தமிழர் பேரவை ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என அதன் மாவட்ட அமைப்பாளர் கலைக்கண்ணன் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai