சுடச்சுட

  

  அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம், தச்சநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

  கூட்டத்துக்கு, திருநெல்வேலி தொகுதி அ.தி.மு.க. செயலர் ஏ.பி.பால்கண்ணன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.முத்துக்கருப்பன், திருநெல்வேலி மேயர் விஜிலா சத்தியானந்த்  உள்ளிட்டோர் பேசினர்.

  கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலரும், தூத்துக்குடி மேயருமான எல்.சசிகலா புஷ்பா பேசுகையில், ஏழைகள் மற்றும் பாட்டாளிகளின் இயக்கமாக அ.தி.மு.க. திகழ்ந்து வருவதால் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசு பாராமுகத்துடன் செயல்படும் நிலையிலும், தனது திறமையான செயலாற்றல் மூலம் தமிழகத்தை முதல்வர் ஜெயலலிதா வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கிறார். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமானால், மக்களவை தேர்தலில் தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றார். கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் பரணி ஏ.சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை கணேசராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai