Enable Javscript for better performance
நெல்லை மாநகராட்சி ஆணையர் காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மாநகராட்சி ஆணையர் காலமானார்

    By திருநெல்வேலி  |   Published on : 31st December 2013 02:49 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) த. மோகன் (57) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.

    சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த இவர், திருநெல்வேலி மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பணியிடம் காலியாக இருந்ததால் கூடுதலாக ஆணையராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணிபுரிந்தவர். ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

    அவரது உடல், அஞ்சலிக்காக தியாகராஜர்நகரில் உள்ள மாநகராட்சி ஆணையர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு துறை அலுவலர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த ஊரான சேலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இவருக்கு, மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai