சுடச்சுட

    

    பணகுடி அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக மகன் கைது செய்யப்பட்டார்.

    பணகுடி அருகே உள்ள புண்ணியவாளன்புரத்தைச் சேர்ந்தவர் ராஜமணி, விவசாயி. இவரது மனைவி ரபி (52). இவர்களுக்கு 3 மகன்கள், மகள் உள்ளனர். மூத்த மகன் தங்கராஜ் (34) குடித்துவிட்டு அடிக்கடி தாயிடம் தகராறு செய்வாராம்.  சனிக்கிழமை தங்கராஜும், அவரது தாயும் தோட்டத்துக்குச் சென்றனராம். மாலையில் தங்கராஜ் மட்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ரபி வரவில்லை.

    இதுகுறித்து பணகுடி போலீஸில் ராஜமணி புகார் தெரிவித்தார். போலீஸார் தங்கராஜிடம் விசாரித்தபோது, தாய் ரபியுடன் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் அடித்தபோது ரபி இறந்துவிட்டதாகவும், அவரின் சடலத்தை சாக்கில் கட்டி பால்குளம் அருகே உள்ள முள்புதரில் வீசியதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து, போலீஸார் பால்குளம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி னர். இதுதொடர்பாக தங்கராஜை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai