சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம், கிராம ஊழியர் சங்கம் ஆகியவை இணைந்து பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை தொடர் முழக்க தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலை "டி' பிரிவு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் 15 நாள்கள் நடைபெற்ற போராட்டக்  காலத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு இதர அரசு அலுவலர்களுக்கு வழங்குவதைப் போன்று நாள் கணக்கிட்டு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். வலைதளம் மூலம் கணக்கெடுப்புப் பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது சுமத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இப் போராட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சி. தங்கபெருமாள் தலைமை வகித்தார். மூன்று சங்கங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் தங்கப்பெருமாள், மணிப்பாண்டி, செல்வராஜ், அய்யாதுரை, சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருநெல்வேலி, நான்குனேரி, செங்கோட்டை, பாளையங்கோட்டை, ராதாபுரம், தென்காசி, அம்பாசமுத்திரம், சிவகிரி, வி.கே. புதூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கிராம உதவியாளர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai