திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மருந்தியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஓய்வுபெற்ற மருந்தியல் துறை பேராசிரியர் ராஜ்குமார் எட்வின் தலைமை வகித்தார்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் துளசிராம் விருதுகளை வழங்கிப் பேசினார். மருந்தியல் துறைத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் பிரியதர்சன், வினோத், பல்கலைக்கழக அளவிலான தேர்வில் சிறப்பிடம் பெற்ற அருணா செல்வாம்பிகா, ஆர்யா, சர்மிளா, கிருஷ்ணமோகன் ஆகியோருக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மருத்துவர்கள் மகாகிருஷ்ணன், பரிமளம், வைரமுத்துராஜா, கீதாராணி, முகமதுரபீக், ரத்தினகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.