மாநில அளவிலான கலைநிகழ்ச்சி போட்டியில், பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த குழந்தைகள் சிறப்பிடம் பெற்றனர்.
தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள சிறப்புப்பயிற்சி மையங்களைச் சேர்ந்த குழந்தைகள் கலந்துகொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்காட் குழும நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் நரிக்குறவர் காலனி பகுதி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்ட சிறப்புப் பயிற்சி மைய குழந்தைகளும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் முதல்பரிசு வென்றனர். அவர்களுக்கு மாநில தொழிலாளர் துறை அமைச்சர் மோகன் பரிசுகளை வழங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை கூடுதல் செயலர் கருப்பசாமி, சென்னை மாநகராட்சி மேயர் சைதைதுரைசாமி உள்பட பங்கேற்றனர்.
சிறப்பிடம் பெற்ற குழந்தைகளை ஸ்காட் கல்விக்குழுமத்தின் தலைவர் கிளிட்டஸ்பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு உள்ளிட்டோர் பாராட்டினர்.