மேல்நிலை துணைத் தேர்வுக்கான தேர்வு மையம் திடீர் மாற்றம்

மேல்நிலை துணைத் தேர்வுக்காக பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி, செப். 23: மேல்நிலை துணைத் தேர்வுக்காக பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.கஸ்தூரிபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேல்நிலை துணைத் தேர்வுகள் வியாழக்கிழமை (செப்.25) முதல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு தனித்தேர்வர்களுக்கு அனுமதிச்சீட்டு விநியோகிக்கப்பட்டிருந்தது.

தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக இந்தத் தேர்வு மையம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கு தேர்வு எழுத அனுமதிச் சீட்டு பெற்றிருந்த அனைவரும், பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com