திருநெல்வேலியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஓவிய ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நல்லாசிரியர் விருது பெற்ற திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் மு. சொக்கலிங்கத்திற்கு, குயில் நண்பர்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவுக்கு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் தலைமை வகித்தார்.
தமிழ் முழக்கப் பேரவைத் தலைவர் பி. ஆவுடையப்பன், திருநாவுக்கரசர் சிவவழிபாட்டு மன்றத் தலைவர் வே.முத்துக்குமாரசாமி, பிஷப் சார்ஜென்ட் பள்ளி முதல்வர் சந்திரமோகன், வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அமைப்பினர் கா.மானேந்தியப்பன், கா.பாலசுப்பிரமணியன், எஸ். விஸ்வநாதன், கே.ஜே.முருகன், பா.ஹரிஹரகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மு. சொக்கலிங்கம் ஏற்புரை ஆற்றினார். தமிழாசிரியை கல்யாணிகுமாரசாமி நன்றி கூறினார்.