Enable Javscript for better performance
ஏறுமுகத்தில் இஞ்சி விலை- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்டத்தில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகளவு இஞ்சி விளைவிக்கப்படுகிறது. அங்கு தற்போது இஞ்சி விளைச்சல் கடுமையாக குறைந்ததையடுத்து திருநெல்வேலி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் இஞ்சி வெகுவாகக் குறைந்துள்ளது. இது மருந்துக்கு மட்டுமல்லாது தற்போது உணவுக்கும் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுவதால் இதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி ரூ.3,500 முதல் 4,000 வரை விற்று வந்த நிலையில், இந்த வாரம் இது ரூ. 6,000 முதல் 6,500 என அதிகரித்துள்ளது. சில்லரை விற்பனையில் 80 ரூபாய்க்கு விற்ற இஞ்சி 125-150  ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் இஞ்சியின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

    இது தொடர்பாக வியாபாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பருவமழை குறைந்ததன் எதிரொலியாக இஞ்சி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில புது ரக இஞ்சி வந்தால் ஓரளவு விலை குறைய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai