Enable Javscript for better performance
கரியமாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கரியமாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

    Published on : 27th March 2014 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விழா, புதன்கிழமை தொடங்கியது. இதற்காக காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழா நாள்களில் காலை, மாலை வேளைகளில் சுவாமி வீதியுலா வருகிறார். இரவு 8 மணிக்கு அன்ன வாகனம், சிம்மவாகனம், சேஷவாகனம், அனுமன் வாகனம், வெள்ளையானை வாகனம், இந்திய விமான வாகனம், குதிரை வாகனம், சந்திர பிரபை வாகனம் ஆகியவற்றில் சுவாமி எழுந்தருள்கிறார்.

    இம்மாதம் 30-ம் தேதி கருடசேவை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறுகிறது. 5-ம் தேதி திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள பத்மநாப தீர்த்த கட்டத்தில் நீலமணி நாதர் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    ஏப்ரல் 8-ம் தேதி இக்கோயிலில் ஸ்ரீ ராமநவமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றை தினம் சிறப்பு திருமஞ்சனமும், யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai