Enable Javscript for better performance
கல்லூரி மாணவிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம்

    By dn  |   Published on : 27th March 2014 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து  விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில், பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முதன்முறையாக வாக்களிக்கவுள்ள கல்லூரி மாணவிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்து ஆட்சியர் மு.கருணாகரன் பேசியது:

    இந்தியாவில் மட்டும்தான் ஜனநாயக ஆட்சி முறையில் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு, மக்களே நாட்டை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஜனநாயக இயக்கத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களை வாக்காளர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும். 1.1.2014 அன்று 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை இடம்பெறச் செய்ய மனுக்கள் வழங்கலாம். 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை எய்த ஒவ்வொரு வாக்காளரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்ட மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

    இதையடுத்து மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. வாக்களிப்பது தொடர்பாக நடந்த கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆட்சியர் மு.கருணாகரன், பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். விழாவையொட்டி வாக்களிப்பது உரிமையா, கடமையா எனும் தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், அரசு அலுவலர்கள், செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள், கல்லூரி நிர்வாகத்தினர், நூலக நிர்வாகத்தினர், மாணவிகள், வாசகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai