Enable Javscript for better performance
கைதி தப்பியோட்டம்: 4 போலீஸார் இடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பேட்டை காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக் கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக 4 போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது கடையில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த குமரய்யா மகன் முருகன் (24), விக்னேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முருகனை கைது செய்த போலீஸார் பேட்டை காவல் நிலையத்தில் அவரை வைத்திருந்தனர். அப்போது அங்கிருந்து முருகன் தப்பியோடினார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் நாகு, தர்மலிங்கம், ஆறுமுகம், தலைமைக் காவலர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையரக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai