Enable Javscript for better performance
சுத்தமல்லியில் விவசாயி கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் விவசாயியை புதன்கிழமை காலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தைச் சேர்ந்த உடையார் மகன் செந்தில்பாண்டி (40). விவசாயி. இவர், தனது குடும்பத்தினருடன் சுத்தமல்லியில் உள்ள வ.உ.சி. நகரில் வசித்து வந்தார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும்

    உள்ளனர். 

    அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்கு புதன்கிழமை காலையில் செந்தில்பாண்டி சென்றாராம். அப்போது தோட்டத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், செந்தில்வேலை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.

    இது குறித்து சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சிநாதன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    கொலையான செந்தில்பாண்டி மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருந்தன. அவற்றிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுதவிர இவருக்கும், வேறு சிலருக்கும் நிலப் பிரச்னை இருந்து வந்துள்ளது. எனவே, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர் போலீஸார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai