Enable Javscript for better performance
தனியார் கிட்டங்கியில் தீவிபத்து- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி நகரத்தில் தனியார் நிறுவன கிட்டங்கியில் புதன்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.

    திருநெல்வேலி நகரம் நயினார்குளம் சாலையோரம் உள்ள ஒரு கட்டடத்தின் தரைத்தளத்தில் கடலைமிட்டாய் தயாரிப்புக் கூடமும், முதல் தளத்தில் மிட்டாய்கள் சேமிப்பு கிட்டங்கியும் உள்ளன. புதன்கிழமை இரவு சேமிப்பு கிட்டங்கியில் தீப்பிடித்தது. தகவலறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வெட்டும்பெருமாள் (பாளையங்கோட்டை), ஜெயபால் (பேட்டை) தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 40 நிமிடங்கள் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில்  மிட்டாய்கள், நன்னாரி பாட்டில்கள் சேதமடைந்தன.

    மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai