Enable Javscript for better performance
தென்னாடு மக்கள் திராவிட கழகம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    தென்னாடு மக்கள் திராவிட கழகம் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் கே.பி.சரவணன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    16-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். கருப்பு பணத்தை மீட்பது, இலங்கை தமிழர் பிரச்னை, நதிநீர் இணைப்பு போன்ற திட்டங்களுக்கு நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றார் அவர்.

    பேட்டியின்போது மாவட்ட நிர்வாகிகள் இ.அருணாசலம் (திருநெல்வேலி), பி.லியோ ஆரோக்கிய ராஜ் (தூத்துக்குடி), எம்.முருகன் (கன்னியாகுமரி), பி.லட்சுமணன், எம்.இசக்கிப்பாண்டி, வி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai