Enable Javscript for better performance
பறக்கும் படையிடம் சிக்கிய ரூ.1.88 லட்சம்: ஆவணங்களைக் காட்டியதால் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பறக்கும் படையிடம் சிக்கிய ரூ.1.88 லட்சம்: ஆவணங்களைக் காட்டியதால் ஒப்படைப்பு

    Published on : 27th March 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினரிடம் புதன்கிழமை இரவு சிக்கிய ரூ.1.88 லட்சத்துக்கு தகுந்த ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் மீண்டும் அப்பணம் ஒப்படைக்கப்பட்டது.

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் வட்டாட்சியர் மாரிமுத்து தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1.88 லட்சம் இருந்தது தெரியவந்தது.

    காரில் வந்த இட்டேரியைச் சேர்ந்த கந்தன் மகன் சுந்தரத்தை பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர், இவை அனைத்தும் நகையை மீட்பதற்காக கொண்டு செல்லும் பணம் எனக் கூறினாராம். பின்னர் பணத்திற்கான ஆவணங்களை சுந்தரம் காட்டியதால், பணம் முழுவதையும் பறக்கும் படையினர் திருப்பி ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai