Enable Javscript for better performance
வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம் பறிப்பு: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி, பணம் பறித்த 2 பேரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

    உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் அ. இன்பராஜ் (39). கட்டட ஒப்பந்ததாரரான இவர் சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் ஒருவரிடம் ஒப்பந்தம் எடுத்து, வீடு கட்டி வருகிறார். இவரிடம் கோல்கத்தாவைச் சேர்ந்த சா. கிட்டு சார்லஸ் (26), ச. பூட்டான் (32) ஆகியோர் பணியாற்றி வருகின்றனராம்.

    இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை வேலையை முடித்து விட்டு, இன்பராஜிடம் ரூ. 8 ஆயிரம் வாங்கிக் கொண்டு, பெரியதாழையில் இருந்து அவர்கள் தங்கியிருக்கும் செட்டிவிளைக்கு நடந்து வந்தனராம். அப்போது அங்கு வந்த  பெரியதாழையைச் சேர்ந்த சே. ஆரோக்கியசாமி, சி. லூர்துராஜ் (23), பா. சியோன் (28) ஆகியோர் இவர்கள் இருவரிடமும் தகராறு செய்தனராம். மேலும், இவர்களைத் தாக்கி, ரூ. 8 ஆயிரத்தைப் பறித்து கொண்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, தட்டார்மடம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து லூர்துராஜ், சியோனை புதன்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆரோக்கியராஜை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai