Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வுப்  பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    மக்களவைத் தேர்தலையொட்டி, தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்து, கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

     வஉசி கல்வியியல் கல்லூரியில் தொடங்கிய பேரணி, சிதம்பரநகர், பிரையன்ட்நகர் உள்ளிட்ட பிரதானச் சாலைகள் வழியாகச் சென்று, மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர்  கலந்துகொண்டனர்.

    திருச்செந்தூர்: வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை திருச்செந்தூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து கோட்டாட்சியர் மு. தமிழ்ராஜன் தொடங்கிவைத்தார்.  பேரணியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோமதிநாயகம், வட்டாட்சியர் ப.நல்லசிவம், பேரூராட்சி செயல் அலுவலர் கொ.ராஜையா, ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கு.கதிரேசன், பேராசிரியர்கள் சிரில் அருள், திருச்செல்வன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்  சிந்து, ஷீலா ஜெபஸ்தா மற்றும் மாணவர், மாணவியர்கள், பேரூராட்சி பணியாளர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணி நான்கு ரதவீதி வழியாக வலம் வந்தது.

    சாத்தான்குளம்: தச்சமொழி ஊராட்சிக்குள்பட்ட விஜயராமபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காமராஜர் சிலை முன்பு தொடங்கிய பேரணிக்கு சாத்தான்குளம் வட்டாட்சியர் பொ. மிகாவேல் ஞானதீபம் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் சசிசிவானந்தம் வரவேற்றார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் பேரணியைத் தொடக்கி வைத்துப் பேசினார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து, அங்குள்ள விநாயகர் கோயில் அருகில் நிறைவடைந்தது. இதில், வாக்களிப்பது எப்படி என செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

     பழங்குளம் ஊராட்சிக்குள்பட்ட ஆனந்தபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மனிதச்  சங்கிலி மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. அங்குள்ள பிரதானச் சாலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில், ரஞ்சி ஆரோன் நினைவு ஐடிஐ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai