Enable Javscript for better performance
10ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. தேர்வு மையங்களில் ஆட்சியர் மு.கருணாகரன் ஆய்வு செய்தார்.

    தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. ஏப்ரல் 9-ம் தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் 451 பள்ளிகளில் படிக்கும் மாணவர்-மாணவிகள் 141 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

    சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 925 மாணவர்களும், 7 ஆயிரத்து 550 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதினர். தென்காசி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 925 மாணவர்களும், 7 ஆயிரத்து 561 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 349 பேர் தேர்வு எழுதினர். திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 717 மாணவர்களும், 8 ஆயிரத்து 501 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வை சிறந்த முறையில் நடத்தவும், ஒழுங்கீன செயல்பாடுகளை தவிர்க்கவும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு,  குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மின்சாரம் தடையின்றி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மாற்றுத் திறனாளிகள்:மாற்றுத்திறனாளி மாணவர்கள், உதவியாளர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் 39 பேரும், தென்காசியில் 33 பேரும், சேரன்மகாதேவியில் 25 பேரும் என 97 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இதுதவிர 9 தனித்தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 360 மாணவர்-மாணவிகளும், சிறப்பு அனுமதி திட்டம் (தட்கல்) மூலம் 370 மாணவர்-மாணவிகளும் தேர்வு எழுதினர்.

    ஆட்சியர் ஆய்வு:பாளையங்கோட்டையில் உள்ள இஞ்ஞாசியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் ஆட்சியர் மு.கருணாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை பார்வையிட்டதோடு, தைரியத்துடன் தேர்வை எழுதுமாறு மாணவிகளுக்கு ஊக்கமளித்தார்.

    அவருடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai