Enable Javscript for better performance
அரசு போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டம்

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.

     கூட்டத்துக்கு தொ.மு.ச. பேரவைச் செயலர் ஏ.தர்மன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் எஸ்.காசிவிஸ்வநாதன், பொதுச்செயலர் ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

     மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் திருத்தத்தால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. சாதாரண விபத்தை காரணம் காட்டி ஓட்டுநர் உரிமத்தை முடக்குவது, அதீத அபராதம், பொதுத்துறை முடக்கம், நீண்டகால சிறைத்தண்டனை போன்றவை அந்தத் திருத்தத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆகவே, இந்தத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தேசிய அளவில் சாலை போக்குவரத்தில் செயல்படும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இம் மாதம் 30 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்துக்கு முழுஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

     இக் கூட்டத்தில், சி.ஐ.டி.யூ. பொதுச்செயலர் எஸ்.பெருமாள், ஹெச்.எம்.எஸ். மாநில துணைத் தலைவர் பி.சுப்பிரமணியன், பி.பாலசுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. கே. கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai