Enable Javscript for better performance
அவல நிலையில் வண்ணார்பேட்டை-வெள்ளக்கோவில் சாலை!- Dinamani

சுடச்சுட

    

    அவல நிலையில் வண்ணார்பேட்டை-வெள்ளக்கோவில் சாலை!

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாநகரில் வண்ணார்பேட்டையில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக சாலையே தெரியாத வகையில் மிகவும் அவல நிலையில் காட்சியளிக்கிறது.

    திருநெல்வேலி மாநகரில் பருவமழை முடிந்து கோடைக்காலம் தொடங்கிய நிலையில் ஆங்காங்கே புதிதாக சாலை அமைக்கும் பணிகளும், பழுதான சாலைகளைச் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    ஆனால், வண்ணார்பேட்டையில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலை கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது.

    தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வழியாக வெள்ளக்கோவிலுக்குச் செல்வதற்கான ஒரே சாலை இதுவாகும். இச்சாலை வெள்ளக்கோவிலை அடைந்ததும், அங்கிருந்து பொட்டல் தீப்பாச்சி அம்மன் கோயில், மணப்படை வீடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வகையில் பாதை உள்ளது.

    அதன்படி, வெள்ளக்கோவில் வரை 3 கி.மீ. தொலைவுக்கும், மணப்படை வீடு வரை 13 கி.மீ. தொலைவுக்கும் சாலை செல்கிறது. சாலையின் வழிநெடுகிலும் செங்கல் சூளைகள், மயானங்கள், குக்குகிராமங்கள் உள்ளன. சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 7 கிராமங்களுக்கான மயானமும் இந்த வழித்தடத்தில் உள்ளது. எனவே, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    சாலை பழுதாகி 5 ஆண்டுகளுக்கு மோலாகிறது. பெரும்பாலான இடங்களில் தார்ச்சாலை முழுவதும் மண் சாலையாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தினமும் சாகசப் பயணத்தை மேற்கொள்கின்றன. மயானங்களுக்கு சடலங்களை எடுத்துச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த சாலையை விரைந்து புதுப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 கி.மீ. தொலைவுக்கு வெள்ளக்கோவில் வரையிலாவது புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் பிராதன கோரிக்கையாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சுற்றுப் பகுதி கிராம மக்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai