Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சேலம் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ. சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் க. சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்டச் செயலர் வெ. சண்முகசுந்தரம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  தமிழ்நாடு சமூக நலத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலர் துரைசிங், பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் கங்காதரன், தமிழ்நாடு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அலுவலர் சங்க மாநில பொதுச்செயலர் பார்த்தசாரதி, ஆயுள் காப்பீட்டுக் கழக கோட்டச் செயலர் முத்துக்குமாரசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரன் நிறைவுரையாற்றினார். லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai