Enable Javscript for better performance
ஓய்வுபெற்றோர் மனிதச் சங்கிலி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் மனிதச் சங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    தமிழகத்தில் மின்கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும். அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். மின்வாரியம் பெற்றுள்ள கடனுக்கான வட்டியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மின்வாரிய பிரிப்பை ரத்து செய்ய வேண்டும். மின்வாரியம் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் பொதுத்துறையாக நீடிக்கச் செய்ய வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் எம். அகஸ்டின் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் எஸ். முத்துக்குமாரசாமி, மாவட்டச் செயலர் எஸ். சண்முகசுந்தரம், அனைத்து ஓய்வூதியர் சங்கக் கூட்டமைப்புச் செயலர் எஸ். வைகுண்டமணி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் மற்றும் வாரிசுதாரர் சங்க நிர்வாகி எஸ். பத்மநாபன், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் மோகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட இணைச் செயலர் ஆர். சண்முகம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai