Enable Javscript for better performance
சத்துணவு  பணியாளர்கள் கலந்தாய்வு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சத்துணவு  பணியாளர்கள் கலந்தாய்வு ஒத்திவைப்பு

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளர்களுக்கு நடைபெற இருந்த இடமாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு பணியாளர்களுக்காக பணியிடமாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை (ஏப்.18) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai