Enable Javscript for better performance
சுந்தரனார் பல்கலை.யில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மூட்டா அமைப்பின் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கிளை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரி வகுப்பு ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு விதிகளின் படியான விடுப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். சட்ட விதிகளை மீறி ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்ததோடு மாணவர்களிடம் கட்டணக் கொள்ளை நடத்தும் தனியார் கல்லூரிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு ஆட்சிக்குழு தீர்மானத்தின்படி முதன்மை கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்துக்கு மூட்டா தலைவர் மனோகர ஜஸ்டஸ் தலைமை வகித்தார். பொதுச்செயலர் சுப்புராஜ் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஜான்சன், செயலர் நவநீதகிருஷ்ணன், தலைவர் ரத்தின சிகாமணி, ஸ்டீபன், கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  மதுரை மண்டலச் செயலர் அஜித் வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் நசீர் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai