Enable Javscript for better performance
பாளை. மத்திய சிறையில் நவீன ரக நிலக்கடலை சாகுபடி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பாளை. மத்திய சிறையில் நவீன ரக நிலக்கடலை சாகுபடி தொடக்கம்

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

    இச்சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளை நல்வழிப்படுத்தவும், அவர்களுக்கு பல்வேறு சுய தொழில்கள் கற்றுத்தந்து வருவாய் ஈட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு நிலக்கடலை சாகுபடி பணி தொடங்கப்பட்டது.

    பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் நவீன ரக நிலக்கடையான டிஜி37ஏ ரக நிலக்கடை சாகுபடி செய்யப்பட்டது. சிறைக் கைதிகள் இந்த சாகுபடி பணியில் ஆர்வம் செலுத்தி தீவிரமாக பணியாற்றியதன் மூலம் கடந்தாண்டு மட்டும் ரூ.2.6 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிகழாண்டும் நிலக்கடலை சாகுபடியைத் தொடங்கி கூடுதல் வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி, சிறையில் உள்ள 1.60 ஹெக்டேர் பரப்பில் நவீன ரக நிலக்கடலை சாகுபடி செய்யும் பணியை, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் சிறைக் கைதிகளுடன் இணைந்து நிலக்கடலை விதைகளை தூவி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், சிறைக் கண்காணிப்பாளர் கனகராஜ், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பெருமாள், பாபா அணுமின் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, சிறைச்சாலை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், சிறை அலுவலர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai