Enable Javscript for better performance
மூதாட்டி கொலை வழக்கு: பெண்ணுக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    மூதாட்டி கொலை வழக்கு: பெண்ணுக்கு ஆயுள் சிறை

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

    ராதாபுரம் அருகேயுள்ள சீலாத்திகுளத்தைச் சேர்ந்தவர் ஜெகதாம்பாள் (71). இவரது வீட்டின் அருகே கேரள மாநிலம், கோட்டயம் சாலுகுளம் பகுதியைச் சேர்ந்த வீரய்யா மனைவி பானு (52) வசித்து வந்தார். ஜெகதாம்பாளுக்கு சமையல், துணி துவைத்தல் போன்ற பணிகளை பானு செய்து கொடுத்து வந்தாராம். கடந்த 31-5-2010ஆம் தேதி இரவு ஜெகதாம்பாளுக்கு, பாலில் மயக்க மாத்திரைகளைக் கலந்து பானு கொடுத்தாராம். அவர் மயங்கியதும், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு, வீட்டில் இருந்த 31 பவுன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கேரளத்துக்குத் தப்பிச் சென்றாராம். பலத்த காயமடைந்த ஜெகதாம்பாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராதாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து பானுவை கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என். முத்துகிருஷ்ணன், குற்றஞ்சாட்டப்பட்ட பானுவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் எம்.எஸ். துரைமுத்துராஜ் ஆஜரானார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai