Enable Javscript for better performance
நவகைலாய கோயில்களுக்கு சிறப்புப் பேருந்து: நெல்லை, தூத்துக்குடியில் முன்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    நவகைலாய கோயில்களுக்கு சிறப்புப் பேருந்து: நெல்லை, தூத்துக்குடியில் முன்பதிவு

    By திருநெல்வேலி  |   Published on : 06th December 2015 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்கழி மாதத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் உள்ள நவ கைலாய கோயில்களுக்குச் சென்று வரும் வகையில் சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

    இது தொடர்பாக, திருநெல்வேலி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை தினங்களான டிச.20, 27, ஜன.3, 10 ஆகிய தேதிகளில் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள நவகைலாய திருக் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேருந்து வசதியை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நபர் ஒருவருக்கு பயணக் கட்டணத் தொகையாக ரூ.300 செலுத்த வேண்டும்.

    வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் காலை 7 மணிக்கு பேருந்து புறப்படும்.

    திருநெல்வேலியில் இருந்து பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, மணத்தி (குட்டித்தோட்டம்), சேர்ந்த பூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய பகுதிகளில் உள்ள நவகைலாய கோயில்களுக்கு சென்று வரும். காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவுக்குள் மீண்டும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து சேரும்.

    திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்த பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai