Enable Javscript for better performance
திமுக இத்தேர்தலுடன் காணாமல் போகும்: சேக்தாவூது- Dinamani

சுடச்சுட

    

    திமுக இத்தேர்தலுடன் காணாமல் போகும்: சேக்தாவூது

    By கடையநல்லூர்  |   Published on : 15th April 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப்பேரவைத் தேர்தலுடன் திமுக காணாமல் போய்விடும் என தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனர்- தலைவர் சேக்தாவூது வியாழக்கிழமை தெரிவித்தார்.

    கடையநல்லூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:

    மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது திமுகதான். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அத்திட்டத்தை கொண்டு வர விடமாட்டேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக அரசின் நலத்திட்டங்கள் சென்றடையாத இடமே கிடையாது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் திட்டங்கள் சென்றடைந்துள்ளன. அந்த சாதனை திட்டங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். அந்த சாதனைகளால் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். கடந்த தேர்தலில் அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டன. திமுகவின் தேர்தல் அறிக்கை கண்துடைப்பு அறிக்கையாகும். இத்தேர்தலுடன் திமுக காணாமல் போய்விடும்.

    கடையநல்லூர் தொகுதியில் தென்னை தொடர்பான தொழிற்சாலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். குறிப்பாக, தமிழக முதல்வரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் தொகுதி பிரச்னைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண முடியும் என்றார் அவர்.

    பேட்டியின்போது, மாநில பொதுச் செயலர் ரேஸ்மாதாவூது, மாநில பொருளாளர் செய்யதுஜமாலுதீன், மாநில நிர்வாகிகள் ஜாஹீர்உசைன், முஸ்தபா, அம்சத்உசைன், முகமதுசித்திக், ஹூசைன்,ரஹ்மத்துல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai