Enable Javscript for better performance
நெல்லையில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு; மற்றொருவர் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு; மற்றொருவர் மாயம்

    By திருநெல்வேலி/அம்பாசமுத்திரம்  |   Published on : 15th April 2016 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாணவர் இறந்தார். மற்றொருவரைக் காணவில்லை. அவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரகுமத்துல்லா மகன் அசன் (15). பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சம்சுல்லுஹா மகன் முகம்மது பகுமி (17). பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார்.

    இவர்கள் தம் நண்பர்களுடன் விளாகம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை மாலையில் குளித்துக் கொண்டிருந்தனராம். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அசன், முகம்மது பகுமி ஆகியோர் நீரில் மூழ்கினர்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் திருநெல்வேலி நகரம் போலீஸாரும், பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அசனின் சடலம் மீட்கப்பட்டது.

    தொடர்ந்து முகம்மது பகுமியை தேடும் பணி இரவு 7 மணி வரை தொடர்ந்தது. இருள் சூழ்ந்ததால் தேடும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    கிணற்றில் மூழ்கி... கடையம் அருகேயுள்ள கோவிலூற்று, ராஜீவ் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சரவணன் (11). இவர் அருகில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் அவர், தனது நண்பர்களுடன் ஊருக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது, சரவணன் திடீரென நீரில் மூழ்கிவிட்டாராம். அப்பகுதியிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே சரவணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கந்தசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai