Enable Javscript for better performance
பேராயர் இல்லத்தை முற்றுகையிட வந்த 40 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பேராயர் இல்லத்தை முற்றுகையிட வந்த 40 பேர் கைது

    By திருநெல்வேலி  |   Published on : 15th April 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபையின் பேராயர் இல்லத்தை முற்றுகையிட வந்த திருச்சபை உறுப்பினர்கள் 40 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட உறுப்பினர்கள் பேராயர் தேர்வுக்கு எதிராக உள்ளனர். எனவே, நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும், பேராயராகத் தேர்வு செய்யப்பட்ட ஜே.ஜே. கிறிஸ்துதாஸ், பேராயர் இல்லத்தைவிட்டு வெளியேற வேண்டும்; திருச்சபை சொத்துகளை பயன்படுத்தக் கூடாது எனக் கோரி திருச்சபையின் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சேகரங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளமானோர் பேராயர் இல்லத்தை வியாழக்கிழமை முற்றுகையிடுவதாக இருந்தது.

    திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாளையங்கோட்டை  மேட்டுத்திடலில் உள்ள பேராயர் இல்லத்தை முற்றுகையிடத் திட்டமிட்டிருந்தனர். இதையறிந்த போலீஸார் போராட்டக்காரர்களை புதிய பேருந்து நிலையம் அருகேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், அசம்பாவிதத்தை தவிர்க்க பேராயர் இல்லத்துக்கு முன்பாக பாதுகாப்பிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 40 பேரை கைது செய்த போலீஸார் மாலையில் விடுவித்தனர்.

    இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் இருவர், பேராயர் அங்கி அணிந்து நாங்களும் பேராயர்தான், இல்லத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் என கோஷங்கள் எழுப்பினர். இச் சம்பவம், திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai