Enable Javscript for better performance
குற்றாலம் சாரல் திருவிழாவில் நீச்சல் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    குற்றாலம் சாரல் திருவிழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நீச்சல் போட்டிகள் நடைபெற்றன.

    குற்றாலம் சிறப்புநிலைபேரூராட்சிக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலஅலுவலர்  த.சேவியர் ஜோதி சற்குணம் தொடங்கிவைத்தார்.

      ஆண்களுக்கான போட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிபதக்கம் பெற்ற சேதுமாணிக்க வேல் முதலிடம் பெற்றார். சுபாஷ்சங்கர்,வேல்சுரேஷ் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாமிடங்களை பெற்றனர்.

      16முதல் 18வயது வரையிலான ஆண்களுக்கான போட்டியில் ஹரீஷ் பிரசாத், சுஜித் கிருஷ்ணா, ஹரிசிங் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 13முதல் 16வயதுக்குள்பட்ட பெண்களுக்கான போட்டியில் ஸ்ரீநிதி, ஸ்மிருதிநாயர், தன்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

      12முதல் 13வயதுக்குள்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் மிதுன், ஸ்ரீகாந்த், ஆதிமூல பெருமாள் ஆகாஷ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 11வயதுக்குள்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் பிரணாப் தர்ஷன், பர்வதி கிருஷ்ண லோகேஷ், அஷ்வின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

      10வயதிற்குள்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் ஜெபின், ஷான்ரோகித், சரங் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 14முதல்15வயதிற்குள்பட்ட சிறுமிகளுக்கான போட்டியில் கௌசிங் விக்டோ, பெனடிக்சன், ஆலன்ராய் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

    12வயதிற்குள்பட்ட சிறுமிகளுக்கான போட்டியில் அக்ஷயா, பெனிசியா ஜோஸ்லின், மிருதுளா ஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

    பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் அ.வெங்கடேஷ் தலைமை வகித்து பரிசுகளை வழங்கிப் பேசினார்.

    மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் பா.சரவணபாபு,  முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகசெல்வி தொகுத்து வழங்கினார்.

    நகர அதிமுக செயலர் அசோக்பாண்டியன் வரவேற்றார். செயல்அலுவலர் கு.லிங்கராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai