Enable Javscript for better performance
நெல்லை பல்கலை. செனட் உறுப்பினர் பதவிக்கு தேர்தல்: 5 மையங்களில் வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை பல்கலை. செனட் உறுப்பினர் பதவிக்கு தேர்தல்: 5 மையங்களில் வாக்குப்பதிவு

    By திருநெல்வேலி  |   Published on : 01st August 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக செனட் உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை 5 மையங்களில் நடைபெற்றது.

    மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் தலா 2 செனட் உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன.  திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 2 செனட் உறுப்பினர் பதவிக்கு மூட்டா அமைப்பை சேர்ந்த சுப்பாராஜ், முருகேசன் மற்றும் சேகர்பேனர்ஜிலிவிங்ஸ்டன் ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 2 பதவிக்கு மனோகரன்ஜஸ்டஸ், ரத்னசிகாமணி, அருள்செல்வன், டாக்டர் அருண்குமார் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 2 பதவிக்கு சிவகாமி, தணிகசாலம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், தென்காசி, வள்ளியூர் ஆகிய 5 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

    மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai