Enable Javscript for better performance
பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாவின் 108 ஆவது பிறந்த தினத்தையொட்டி,  முரசொலி அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.

    திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் அமைப்பாளர் டி.ஏ.கே.எம். கொம்பையா பாண்டியன் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டத் தலைவர் புலவர் குமாரசுப்பிரமணியம், துணை அமைப்பாளர் அ. பாலன் என்ற ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை மத்திய மாவட்டச் செயலர் மு. அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார்.

    ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் மு. பேச்சிபாண்டியன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் சொ. பெருமாள், தீர்மானக் குழு உறுப்பினர் ப.ஆ. சரவணன், முன்னாள் மேயர் மு. உமாமகேஸ்வரி, மத்திய மாவட்டப் பொருளாளர் பா. அருண்குமார், தச்சை பகுதி செயலர் பூ. சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம். இலக்கிய அணி துணை அமைப்பாளர் கவிஞர் சு.த. மூர்த்தி வரவேற்றார். இலக்கிய அணி பொருளாளர் செ. செல்லம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai