சுடச்சுட

  

  பாளையங்கோட்டை காவல் நிலையத்தை எஸ்டிபிஐ கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.

  பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் இந்து முன்னணி சார்பில் மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தநிலையில் அப்பகுதிக்கு வந்த ஏர்வாடியைச் சேர்ந்த சாம், பேட்டையைச் சேர்ந்த மஜித், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த தாரிக், சாதிக் ஆகியோரை போலீஸார் திடீரென பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

  இதுகுறித்த தகவலறிந்ததும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி, மாவட்ட பொதுச்செயலர் இலியாஸ், அகமதுநவவி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

  அப்போது அவர்கள் கூறுகையில், விசாரணை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் 4 பேரை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் மீது எவ்வித புகாரும் அளிக்கப்படாத நிலையில் விசாரிக்க அழைத்துச் சென்றதோடு, குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்காததற்கு ஆட்சேபம் தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

  இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் தங்களது செல்லிடப்பேசி மூலம் மாநாட்டு நிகழ்வுகளைப் பதிவு செய்தனர். அதன்பேரில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai