Enable Javscript for better performance
மாநில கபடி போட்டி: நெல்லை மாவட்ட வீரர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில கபடி போட்டி: நெல்லை மாவட்ட வீரர்கள் தேர்வு

    By திருநெல்வேலி  |   Published on : 01st August 2016 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான கபடி போட்டிக்கு, திருநெல்வேலி மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    28 ஆவது மிக இளையோர் பிரிவு மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக. 5 இல் தொடங்கி 3 தினங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட அணி வீரர்களுக்கான தேர்வு முகாம் திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 80 பேர் கலந்துகொண்டனர்.

    மாவட்ட கபடி கழகத் தலைவர் எஸ்.கே.எம். சிவக்குமார், செயலர் பி. பகவதிபெருமாள் ஆகியோர் முன்னிலையில் தேர்வு குழுவினர் டி. சுந்தர்ராஜ், வி. மணிசேகர், எம். உதயகுமார், எஸ். வெங்கடேஷ், கே. மணிகண்டன், ஏ. ஸ்டாலின், இமானுவேல், மு.கி. சீதாராமன், எல். வெற்றி, உமாநாத் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர்.

    தேர்வு செய்யப்பட்ட 12 வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து மாநிலப் போட்டியில் அவர்கள் பங்கேற்கின்றனர் என அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai