சுடச்சுட

    

    மாநில கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு முகாம்

    By திருநெல்வேலி  |   Published on : 01st August 2016 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு முகாம் நடைபெற்றது.

    தஞ்சாவூரில் ஆக. 12 இல் தொடங்கி 4 தினங்கள் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இப் போட்டியில்,  மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இப் போட்டியில் பங்கேற்பதற்கான திருநெல்வேலி மாவட்ட வீரர்கள் தேர்வு முகாம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 60 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    திருநெல்வேலி மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் பி. பிரபாகரன், செயலர் என். ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட தேர்வுக் குழு பயிற்றுநர் வெங்கடேஷ், முன்னாள் இந்திய ஆட்டக்காரர்கள் சிவராஜன், பாலமுருகன் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட 12 வீரர்களுக்கு திங்கள்கிழமை முதல் ஒரு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து மாநில போட்டியில் அவர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai