சுடச்சுட

  

  முதல்வர் கோப்பை டென்னிஸ்: சென்னை அணி சாம்பியன்

  By திருநெல்வேலி  |   Published on : 01st August 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாநில டென்னிஸ் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் சென்னை அணி வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

  பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 29) தொடங்கிய இப்போட்டியில், 14 மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணி வீரர்கள் பங்கேற்றனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனிப் பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.

  இரு பிரிவுகளிலும் கோவை, சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு பிரிவுகளிலுமே சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாமிடங்களை கோவை அணி பெற்றது. ஆண்கள் பிரிவில் திருவள்ளூர் அணி மூன்றாமிடமும், பெண்கள் பிரிவில் ஈரோடு அணி மூன்றாமிடமும் பிடித்தன.

  போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.சேவியர் ஜோதி சற்குணம் வரவேற்றார். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பரிசுகளை வழங்கிப் பேசினார்.

  முதலிடம் பிடித்த அணி வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.8 லட்சம், இரண்டாமிடம் பிடித்த அணி வீரர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சம், மூன்றாமிடம் பிடித்த அணி வீரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசும், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

  திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருநெல்வேலி மண்டல முதுநிலை மேலாளர் என்.சார்லஸ் மனோகர், அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் பாப்புலர் வி.முத்தையா, மண்டலக் குழுத் தலைவர்கள் எம்.சி. ராஜன், மோகன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் யு.எஸ்.ஓ. வெடங்கடேசன், வங்கிச் செயலர் கணேஷ்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai