Enable Javscript for better performance
குருவாயூர் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    குருவாயூர் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதம்

    By திருநெல்வேலி  |   Published on : 02nd August 2016 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குருவாயூர் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை இரவு வந்து சேர்ந்தது.

    சென்னை-குருவாயூர் இடையே இயக்கப்படும் குருவாயூர் விரைவு ரயில் வழக்கமாக இரவு 7.20 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வந்து சேரும். திங்கள்கிழமை இந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8.20 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் குருவாயூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும், கேரள பயணிகளும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், விழுப்புரம் அருகே இரட்டை ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் குருவாயூர் விரைவு ரயில் மாற்றுப்பாதை வழியாக மாயவரம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்பட்டது. அதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai