சுடச்சுட

    

    தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில், பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்தியாவில் தலித், இஸ்லாமியர்கள் மீதான அடக்கு முறைகளை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப் புலிகள் கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலர் ப.தமிழ்மாறன் தலைமை வகித்தார். மாநில இளம்புலிகள் அணிச் செயலர் மு.கலைவேந்தன், துணைப் பொதுச்செயலர் ச.வீரபெருமாள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    நிர்வாகிகள் வெ.தமிழ்வளவன், குற்றாலம் குமார், க.தமிழரசு, வே.தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai