சுடச்சுட

  

  நியாயவிலைக் கடை இடமாற்றம்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

  By திருநெல்வேலி  |   Published on : 02nd August 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி நகரில் இயங்கி வந்த நியாயவிலைக் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

  திருநெல்வேலி மாநகராட்சி 54 ஆவது வார்டுக்குள்பட்ட கருவேலன்குண்டு தெருவில் ஏபி 14 மற்றும் ஏபி 15 ஆகிய 2 நியாயவிலைக் கடைகள் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்தன. இக்கடைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இக்கட்டடம் பழுதடைந்ததால், கடந்த 6 மாதங்களாக 2 கி.மீ. தொலைவில் திருநெல்வேலி நகரம் லூகாபுரத்தில் இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இங்கு சென்று பொதுமக்கள் பொருள்கள் வாங்க பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

  பொருள்களை வாங்கி வர பொதுமக்கள்  ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது. மேலும் தற்போது அங்கு நியாயவிலைக் கடை கட்டடம் கட்டும் பணி முடங்கி இருப்பதாகவும் புகார் தெரிவித்து திங்கள்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

  போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பெண்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai