சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 46.47 லட்சம் நல உதவிகள்

  By திருநெல்வேலி  |   Published on : 02nd August 2016 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் திங்கள்கிழமை குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 46.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில்  திருமண உதவித் திட்டத்தின் கீழ் பட்டதாரி மாற்றுத் திறனாளி பெண்கள் 52 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம், 4 கிராம் தங்கம் மற்றும் பட்டதாரி அல்லாத 44 பயனாளிகளுக்கு ரூ. 25 ஆயிரம், 4 கிராம் தங்கம், மாற்றுத் திறனாளியை திருமணம் செய்தவர்கள், பார்வையிழந்தவர் மாற்றுத் திறனாளி அல்லாதவரை திருமணம் செய்தவர்கள், செவித்திறன் குறைவு உடையோர் மாற்றுத் திறனாளி அல்லாதவரை திருமணம் செய்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி, ரூ. 25 ஆயிரத்திற்கான சேமிப்புப் பத்திரம் மற்றும் 4 கிராம் தங்கம், பட்டதாரி அல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 12,500 நிதி, ரூ. 12,500 க்கான சேமிப்புத் பத்திரம், 4 கிராம் தங்கம் உள்பட ரூ. 46 லட்சத்து 46 ஆயிரத்து 960 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வழங்கினார்.

  இந் நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் எப். சாந்திகுளோரி எமரால்ட்,பேச்சு பயிற்சியாளர் அனிதாஆரோக்கியபிரமிளா, உதவியாளர் பிரேமலதா, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai