சுடச்சுட

  

  வல்லவன்கோட்டை கிராமத்தை நெல்லை வட்டத்தில் சேர்க்க கோரிக்கை

  By திருநெல்வேலி  |   Published on : 02nd August 2016 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வல்லவன்கோட்டை கிராமத்தை திருநெல்வேலி தாலுகாவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

  மானூர் வட்டம், வல்லவன்கோட்டை கிராம மக்கள் ஊர் நாட்டாமை எஸ். சுடலைகண்ணு தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு: வல்லவன்கோட்டை கிராமத்தில் 450 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம், கூலிவேலை செய்து குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றோம். இக் கிராமத்தில் தொடக்கப் பள்ளி உள்ளது. வல்லவன்கோட்டை, துலுக்கர்பட்டி, வாகைக்குளம், சிவனியார்குளம், துவராசி ஆகிய 5 கிராமங்களுக்கான கிராம நிர்வாக அலுவலகம் துலுக்கர்பட்டி கிராமத்தில் இயங்கி வந்தது.

  திருநெல்வேலி வட்டத்தை பிரித்த போது, துலுக்கர்பட்டி கிராமத்தை மானூர் வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 5 கிராம மக்களுக்கு தங்களுக்கு தேவையான சான்றுகளை பெற மானூர் செல்ல வேண்டியுள்ளது. இக்கிராமத்திலிருந்து மானூருக்கு போதிய பேருந்து வசதியும் இல்லை.

  இக் கிராமங்களிலுள்ள மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு வர வேண்டியுள்ளது. மானூர் வட்டாட்சியர் அலுவலகம் தொலைவில் இருப்பதால் 2 பேருந்துகள் மாறி செல்ல வேண்டும். ஆகவே கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு துலுக்கர்பட்டி வருவாய் கிராமத்தை திருநெல்வேலி வட்டத்தில் சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai