சுடச்சுட

  

  வேலை வாங்கி தருவதாக மோசடி: மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

  By திருநெல்வேலி  |   Published on : 02nd August 2016 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப் பணியில் சேர்த்து விடுவதாக ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக பேரூராட்சி பணியாளர் மீது புகார் தெரிவித்து மாற்றுத் திறனாளி இளைஞர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

  அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பாப்பாகுடி மேலத்தெருவைச் சேர்ந்த ராமையா மகன் நாலாயிரமுத்து (36). மாற்றுத் திறனாளியான இவருக்கு பத்தமடை, களக்காடு, சிவகிரி ஆகிய பேரூராட்சிகளில் ஏதாவது ஒன்றில் அலுவலக உதவியாளர் பணியில் சேர்த்து விடுவதாகத் தெரிவித்து பத்தமடை பேரூராட்சிப் பணியாளர் ஒருவர்  ரூ. 35 ஆயிரம் முன்பணமாக வாங்கினாராம்.

  மேலும் ரூ. 35 ஆயிரம் தருமாறு கேட்டதை அடுத்து நாலாயிரமுத்து தனது மனைவியின் நகையை விற்று பணம் கொடுத்தாராம். பல மாதங்கள் ஆகியும் நாலாயிரமுத்துவை அரசுப் பணியில் சேர்த்து விடவில்லையாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் நிலையத்தில் நாலாயிரமுத்து புகார் அளித்துள்ளார்.

  இதனிடையே, திங்கள்கிழமை குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நாலாயிரமுத்து, தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். அப்போது பணியில் இருந்த போலீஸார் நாலாயிரமுத்துவை தடுத்து நிறுத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட நாலாயிரமுத்துவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai