சுடச்சுட

  

  திருநெல்வேலி மாவட்டத்தில் 12 கிராமங்களில் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

  இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  திருநெல்வேலி வட்டத்தில் கண்டியப்பேரி-1, பாளையங்கோட்டையில் மேலப்பாளையம்,  சங்கரன்கோவிலில் மேலஇலந்தைகுளம், திருவேங்கடத்தில் குறிஞ்சாகுளம், ஆலங்குளம் வட்டத்தில் வெங்கடாம்பட்டி-3, அம்பாசமுத்திரம் வட்டத்தில் கடையம்பெரும்பத்து பகுதி-1, பகுதி-2, நான்குனேரி வட்டத்தில் வடுகட்சிமதில், ராதாபுரம் வட்டத்தில் கும்பிகுளம், மானூர் வட்டத்தில் பிள்ளையார்குளம், சேரன்மகாதேவி வட்டத்தில் இலுப்பைகுறிச்சி, செங்குளம் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும்.

  இந்த முகாம்களில், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாம் இடத்திலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai