சுடச்சுட

  

  ஆசிரியர், தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

  By திருநெல்வேலி  |   Published on : 03rd August 2016 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், இடைநிலை ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு புதன்கிழமை (ஆக.3) தொடங்குகிறது.

  இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நிர்மலாஜேசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  நிகழ் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதலுக்கு, இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. இக்கலந்தாய்வு பாளையங்கோட்டை பிஷப் சார்ஜன்ட் நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை (ஆக. 3) தொடங்குகிறது. முதல் நாளில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொதுமாறுதல் கலந்தாய்வு, 4 ஆம் தேதி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.  6 ஆம் தேதி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு, பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. 7 ஆம் தேதி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பொதுமாறுதல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பதிவு உயர்வு கலந்தாய்வு ஆகியன நடைபெறும்.

  13 ஆம் தேதி இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வும், 14 ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள், மாவட்டத்துக்குள் பொதுஇடமாறுதல் கலந்தாய்வும், 20 ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு ஆகியன நடைபெறும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai