சுடச்சுட

  

  சுதந்திர தின நிகழ்ச்சியை பாளை வ.உ.சி. மைதானத்தில் நடத்த வலியுறுத்தல்

  By திருநெல்வேலி  |   Published on : 03rd August 2016 06:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுதந்திர தின நிகழ்ச்சியினை பாளையங்கோட்டை வ.உ. சிதம்பரனார் மைதானத்தில் நடத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

  இந்து மக்கள் கட்சியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எஸ். உடையார் தலைமையில் அக் கட்சியினர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனு:

  சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் தேசிய கொடி ஏற்றுதல், காவல்துறை அணிவகுப்பு, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

  விழா நடைபெறும் இடம் மாவட்டத்தின் தலைமையிடத்தில் இருந்து தொலைவில் அமைந்திருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் செல்வதில் சிரமம் உள்ளது.

  ஆகவே அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் சுதந்திர தின நிகழ்ச்சியை பாளையங்கோட்டை வ.உ. சிதம்பரனார் விளையாட்டு மைதானத்தில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai